Thursday, 18 December 2014


பிடிசி தளங்களுக்கு பேபால் வங்கிகணக்கிற்கு ஆரம்பிப்பது எப்படி?

பிடிசி தளங்களுக்கு பேபால் வங்கிகணக்கிற்கு  ஆரம்பிப்பது எப்படி?
     


பேபால் உறுப்பினர் கணக்கு துவங்குவது எப்படி



பேபால் என்றால் என்ன உங்களுக்கு தெரியுமா?
பேபால் ஆன்லைனில் மிக விரைவாகவும் பாதுகாப்பாகவும் பணம் அனுப்பவும் பெற்றுக்கொள்ளவும் பயன்படும் உலகின் முதன்மையான பணபரிமாற்றதளம்.பழைய காசோலைகளுக்கும் வரைவோலைகளுக்கும், பணவிடைகளுக்கும் மாற்றாக டிஜிட்டல் முறையில் பணப்பட்டுவாடா செய்ய உதவும் இ-காமர்ஸ் நிறுவனமே பேபால்.இந்நிறுவனம் 2000 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.2002 ஆம் ஆண்டு இ-பேயின் துணை நிறுவனமாக (Subsidiary) மாறியது. பேபால் நிறுவனத்தின் சர்வதேச தலைமையகம் சிங்கப்பூரில் அமைந்துள்ளது. நமது இந்திய நாட்டில் சென்னை மற்றும் பெங்களூருவில் பேபால் தலைமையகங்கள் செயல்படுகின்றன.

பேபால் சிறப்பம்சங்கள்

உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த 20 கோடிக்கும் அதிகமான மக்கள் பேபால் பணபரிமாற்ற சேவையை பயன்படுத்துகிறார்கள்.
இந்நிறுவனம் பல்வேறு நாடுகளை சேர்ந்த 190 சந்தைகளில் வர்த்தகம் செய்து வருகிறது.
உலகில் உள்ள 25 நாடுகளின் நாணய மதிபபுகளில் உடனடியாக பணம் அனுப்பவும் பெறவும் முடியும் என்பதே பேபால் பணபரிமாற்ற தளத்தின் தனி சிறப்பு. ( உதாரணத்திற்கு இந்திய ரூபாய் ,  அமெரிக்க டாலர் போன்று )
பாதுகாப்பான பணபரிமாற்ற சேவைக்காக இருபதுக்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளது பேபால் நிறுவனம்.

பேபால் உறுப்பினர் கணக்கு துவங்குவது எப்படி

குறிப்பு : நமது இந்திய நாட்டில் பேபால் உறுப்பினர் கணக்கு துவங்க உங்களிடம் கட்டாயம் பான் கார்டு (Pan Card ) இருக்க வேண்டும்.
.
வழிமுறை இரண்டு 

வழிமுறை மூன்று 
வழிமுறை நான்கு 

பேபால் உறுப்பினர் கணக்கு துவங்கும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்
1.E-Mail address:பேபால் பணபரிமாற்ற தளத்தில் உங்களின் ஈமெயில் முகவரியே உறுப்பினர் கணக்காக செயல்படுகிறது
அடுத்து பாஸ்வேர்டு கொடுத்து விட்டு, அப்படியே நினைவாக எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
2 & 3 ஆகிய நம்பர் கொடுத்துள்ள இடம் மிக முக்கியம். வெளிநாட்டினர்  என்றால் first name, middle name, last name என பெயரை மூன்றாகப் பிரித்து வைத்திருப்பார்கள். ஆனால், நாம் பெயர் & அப்பா இனிசியல் ஆகிய இரண்டைத்தான் பெயராக  பயன்படுத்துகிறோம்,  ஆகையால் 2- குறிப்பிட்டுள்ள இடத்தில் உங்களின்  முழுப் பெயர் (எ.கா : என்னுடைய பெயர் x , அடுத்து வரும் Middle name என்ற கட்டத்தில் எதுவும் கொடுக்க வேண்டாம். 3 குறிப்பிட்டுள்ள கட்டத்தில், அதாவது last name -ஆக உங்களது இனிசியலைக் கொடுங்கள் (எ.கா: G ).
இங்கே கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் நீங்கள் உறுப்பினர் கணக்கு துவங்கும் பெயரில்  உங்களுக்கு நமது நாட்டில்  ஒர் வங்கிக் கணக்கு இருக்க வேண்டும். அவ்வாறு இல்லை எனில் உங்கள் வீட்டில் யாருடைய  பெயரில் வங்கிக் கணக்கு இருக்கிறதோ! அவர்களது பெயரில் கணக்கினைத் தொடங்குங்கள். உங்களது தந்தைக்குத்தான் வங்கியில் அக்கவுண்ட் இருக்கிறது என்றால் அவரது பெயரிலேயே தொடங்குங்கள். ஏனெனில் பின்னர், உங்களது வங்கி அக்கவுண்டை பேபாலுடன் இணைக்கும் பொழுது, பேபாலில் கொடுத்துள்ள பெயரும் – நம்மூர் வங்கியில் இருக்கும் பெயரும் சரியாக ஒன்றவில்லை என்றால், நிச்சயமாக பணத்தினைப் பெற முடியாது.
அடுத்து யார் பெயரைக் கொடுத்தீர்களோ அவரது பிறந்த தினத்தினைக் கொடுங்கள்.
4 உங்களின்  PAN கார்டு நம்பரை உள்ளீடு செய்யுங்கள் . உங்களிடம் இருக்கும் என நம்புகிறேன், இல்லாவிடில் ஒர் 350 ரூபாய் செலவு செய்து வாங்கிக் கொள்ளுங்கள். அதுவும், யார் பெயரில் அக்கவுன்ட் உருவாக்குக்கிறீர்களோ, அவரது பெயரில் பான்  கார்டு இருக்க வேண்டும்.ஆன்லைனிலும் பான் கார்டு விண்ணப்பம் செய்யலாம் இதற்காக ஆகும் செலவு வெறும் 96 ரூபாய் மட்டுமே.
அடுத்து, உங்களது வீட்டு முகவரி மற்றும் மொபைல் எண்ணைச் சரியாகக் கொடுத்துவிட்டு Agree & create a account என்றுள்ளப் பட்டனைக் கிளிக் செய்யுங்கள்
உங்களின் மின்னஞ்சல் முகவரியை உறுதி செய்து கொள்ள  ஒரு VERIFICATION LINK அனுப்பப்படும் அந்த லிங்கில் கிளிக் செய்து உங்களது பேபால் உறுப்பினர் கணக்கில் லாகின் செய்யவும்.

பேபால் இல் VERIFIED செய்யப்பட்ட உறுப்பினர் கணக்கு இருந்தால்தான்  இந்திய வங்கிகளுக்கு பணம் பெற முடியும். அதற்கு கட்டாயம் இரண்டு செயல்களை செய்ய வேண்டும்.
.1. purpose code ( நோக்க குறியீட்டு எண் )
2. Bank account details ( வங்கி உறுப்பினர் விவரங்கள் )
ptc இணையதளங்களில் பணம் சம்பாதிப்பவர் எனில் நீங்கள் (Advertising and market research) என்ற purpose code ஐ   தேர்வு செய்யவும். பின்வரும் படத்தில் நீங்களே காணலாம்.
Purpose Code தேர்வு செய்த பிறகு
STEP 5

பேபால் பணபரிமாற்ற தளத்தில் இந்திய வங்கி கணக்கை இணைப்பது எப்படி 


உங்களது பேபால் உறுப்பினர் கணக்கை verified செய்துகொள்ள select 
profile and then Add Bank Account என்பதை தேர்வு செய்யவும் 
STEP 6
STEP 7

Name On Account:  உங்களின் பேபால்  கணக்கில் இருக்கும் பெயரும், வங்கிக் கணக்கில் இருக்கும் பெயரும் ஒரே பெயராக இருக்க வேண்டும்.
Bank Name: அடுத்து பேங்க் நேம் (State Bank of India/Indian Bank/ICICI)
NEFT IFSC Code: இது உங்களின் வங்கி காசோலை புத்தகத்தில் அச்சிடப்பட்டு இருக்கும் அல்லது., இந்தத் வலைப்பூவில் இந்தியாவில் இருக்கும் அனைத்து வங்கிக் கிளைகளின் IFSC எண்கள் உள்ளது.
http://www.bankifsc.com/உதாரணத்திற்கு பூர்த்தி செய்யபட்ட படிவம் பின்வருமாறு இருக்கும் 

STEP 8
பேபால் நிறுவனம் உங்களின் வங்கி கணக்கிற்கு 2  பணப் பரிவர்த்னைகளை நிகழ்த்தும்.  அந்தப் பரிவர்த்னைகளின் பண மதிப்பு என்ன என்பதை  2-3 நாட்கள் கழித்து உங்களின் வங்கிக் கணக்கில் பார்க்கவும்.  அந்த மதிப்பை நீங்கள் உங்களின் Paypal கணக்கில் உள்ள “Confirm Bank” எனும் பகுதியில் சென்று கொடுத்தால் உங்களின் பேபால் உறுப்பினர் கணக்கு சரிபார்க்கப்பட்டு விடும்
Verified செய்யப்பட்ட பேபால் உறுப்பினர் கணக்கு பின்வருமாறு இருக்கும்

பேபால் பணபரிமாற்ற தளத்திலிருந்து இந்திய வங்கிகளுக்கு பணம் பெறுவது எப்படி?


உங்களின் பேபால் உறுப்பினர் கணக்கில் குறைந்தபட்சம் 10 $ அமெரிக்க டாலர் பணம் உள்ளது என்று வைத்துகொள்வோம். உங்களின் பேபால் கணக்கு Verified  செய்யப்பட்டதாக இருந்தால்,இந்திய வங்கிகளுக்கு பணம் பெற  நீங்கள் பேபால் பணபரிமாற்ற தளத்தில்  லாகின்  செய்ய வேண்டிய அவசியம் கூட கிடையாது.பேபால் பணபரிமாற்ற நிறுவனமே அன்றைய தேதியில் டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பில் Convert செய்து உங்களின் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பி விடுவார்கள்.இது நமது நாட்டின்  ரிசர்வ் வங்கி பேபால் பண பரிமாற்ற தளத்திற்கு இட்ட கட்டளையும் கூட .நமது இந்திய நாட்டு வங்கிகளுக்கு பணம் வந்து சேர குறைந்தபட்சம் இரண்டு நாட்கள் முதல் அதிகபட்சம் ஏழு நாட்கள் வரை ஆகும்.


பேபால் அக்கவுண்ட்PayPal.com Free Online Bank Account
இணையதள வேலைக்கு தயாராகிவிட்ட நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டியதும், கண்டிப்பாக வைத்துக் கொள்ள வேண்டியதுமான ஒன்று ஆன்லைன் பேங்க் அக்கவுண்ட். பல தளங்கள் ஆன்லைன் பேங்க் அக்கவுண்ட் கொடுத்தாலும், பல வருடங்களாக, அதாவது 2000 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு இன்று வரையிலும் சிறப்பாக நம்பகத்தன்மையுடன், பல வலைத் தளங்களிலும் பயன்படுத்தக் கூடிய PayPal.com என்ற தளத்தில் நமது இலவச ஆன்லைன் பேங்க் அக்கவுண்டைக் உருவாக்கிக் கொண்டால், எளிதாக நமக்கான ஆன்லைன் வேலை மூலம் வர வேண்டியப் பணத்தினைப் பெற்றுக் கொள்ளலாம்.
Pay and get paid
anywhere in the world.
Millions of customers around the world trust PayPal
Create your Free PayPal Online Bank Account:
உங்களுக்கான ஆன்லைன் வங்கிக் கணக்கினைத் தொடங்க முதலில் www.paypal.com என்ற முகவரிக்குச் செல்லுங்கள்.

அடுத்து பக்கத்தின் நடுவில் இருக்கும் Sign up Now என்பதனைக் கிளிக் செய்யுங்கள்.

அடுத்து வரும் பக்கத்தில், நாடு இந்தியா (நீங்கள் இருக்கும் நாடு) என்பதனைத் தேர்வு செய்துவிட்டு, An account for individuals என்ற பக்கத்தில் இருக்கும் Get Started என இருக்கு இளம் ஆரஞ்சிச்சிவப்பு நிறக் பட்டனை கிளிக் செய்யுங்கள்.

Get started என்று கிளிக் செய்ததும் திறக்கும் பக்கத்தில் வரும் வங்கி கணக்குக் தொடங்குவதற்காக விண்ணப்பப் படிவம் தான் மேலேக் கொடுக்கப்பட்டது.

Paypal Bnak Application Form:
1. மேல் உள்ள படத்தில் டிக் செய்துள்ள நம்பர் 1 மிக முக்கியம். அதில் கொடுக்கும் E-Mail address தான், உங்களுக்கான பேபால் ஐடி. இப்படிவத்தினை நிரப்பி, உங்களுக்கான ஆன்லைன் பேங்க் அக்கவுண்ட் ஒபன் செய்துவிட்டீர்கள் என்றால், யாராவது உங்களது பேபால்(PayPal ID) ஐடி என்ன எனக் கேட்டால் இந்த ஈ-மெயில் ஐடியைத்தான் கொடுக்க வேண்டும்.

அடுத்து பாஸ்வேர்டு கொடுத்து விட்டு, அப்படியே நினைவாக எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

2 & 3 ஆகிய நம்பர் கொடுத்துள்ள இடம் மிக முக்கியம். வெளிநாட்டவர்கள் என்றால் first name, middle name, last name என பெயரை மூன்றாகப் பிரித்து வைத்திருப்பார்கள். ஆனால், நாம் பெயர் & அப்பா இனிசியல் ஆகிய இரண்டைத்தான் பெயராக பயன்படுத்துவோம், இல்லையா!. ஆகையால் 2- குறிப்பிட்டுள்ள இடத்தில் உங்களது முழுப் பெயர் (எ.கா : Selva Athithan) , அடுத்து வரும் Middle name என்ற கட்டத்தில் எதுவும் கொடுக்க வேண்டாம். 3 குறிப்பிட்டுள்ள கட்டத்தில், அதாவது last name -ஆக உங்களது இனிசியலைக் கொடுங்கள் (எ.கா: K ).

அதைவிட மிக முக்கியம், இப்பெயரில் உங்களுக்கு நம்மூரில் ஒர் வங்கிக் கணக்கு இருக்க வேண்டும். அவ்வாறு இல்லை எனில் உங்கள் வீட்டில் யார் பெயரில் வங்கிக் கணக்கு இருக்கிறதோ! அவர்களது பெயரில் கணக்கினைத் தொடங்குங்கள். உங்களது தந்தைக்குத்தான் வங்கியில் அக்கவுண்ட் இருக்கிறது என்றால் அவரது பெயரிலேயே தொடங்குங்கள். ஏனெனில் பின்னர், உங்களது வங்கி அக்கவுண்டை பேபாலுடன் இணைக்கும் பொழுது, பேபாலில் கொடுத்துள்ள பெயரும் - நம்மூர் வங்கியில் இருக்கும் பெயரும் சரியாக ஒன்றவில்லை என்றால், பணத்தினைப் பெற முடியாது.


அடுத்து யார் பெயரைக் கொடுத்தீர்களோ அவரது பிறந்த தினத்தினைக் கொடுங்கள்.

4 வதாக கேட்பது PAN கார்டு நம்பர். உங்களிடம் இருக்கும் என நம்புகிறேன், இல்லாவிடில் ஒர் 350 ரூபாய் செலவு செய்து வாங்கிக் கொள்ளுங்கள். அதுவும், யார் பெயரில் அக்கவுன்ட் உருவாக்குக்கிறீர்களோ, அவரது பெயரில் பேன் கார்டு இருக்க வேண்டும்.

அடுத்து, உங்களது வீட்டு முகவரி மற்றும் மொபைல் எண்ணைச் சரியாகக் கொடுத்துவிட்டு Agree & create a account என்றுள்ளப் பட்டனைக் கிளிக் செய்தால், உங்களுக்கான ஆன்லைன் பேங்க் அக்கவுண்ட் ரெடி.


Activate PayPal account @ Mail:
ஆன்லைன் பேங்க் அக்கவுண்ட் ரெடி என்ற ஒர் வாசகத்துடன், நீங்கள் கொடுத்துள்ள இமெயில் ஐடிக்கு ஒர் மெயில் அனுப்பி இருப்பார்க்கள். ஆகையால் உடனே சென்று, அந்த இமெயிலைத் திறந்து, அதற்குள் இருக்கு அக்டிவேட் அக்கவுண்ட் டூ கிளிக் திஸ் ப்லோ லிங்க் என்றிருக்கும் லிங்கைக் கண்டு, கிளிக் செய்து கணக்கினை அக்டிவேட் செய்யுங்கள்.

ஒகே... வெற்றிகரமாக கணக்கினை அக்டிவேட் செய்துவிட்டீர்கள் என்றால் அடுத்தக்கட்டமாக நீங்கள் செய்ய வேண்டியது, Paypal.com -க்குள் லாக்கின் ஆவது தான். பேபால் அக்கவுண்ட்டுக்குள் லாக்கின் ஆகும் பொழுது நாம் சரியாக http://www.paypal.com என்ற முகவரியைத்தான் டைப் செய்திருக்கோமா எனப் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஒகே, லாக்கின் ஆகிவிட்டீர். அடுத்து உங்களது வங்கிக் கணக்கினை பேபால் ஆன்லைன் வங்கியுடன் இணைத்துவிடுங்கள். அவ்வாறு நீங்கள் இணைத்துவிட்டால், உங்களது பேபால் அக்கவுண்டுக்கு வரும் பணம் எல்லாம் அடுத்த 24 மணி நேரத்திற்குள் உங்களது வங்கிக் கணக்கிற்கு வந்துவிடும். எ.கா: நான் எனது SBI Bank account-ஐ பேபால் அக்கவுண்ட்டுடன் இணைத்துள்ளேன். ஆகையால், சிட்டிகா ஆன்லைன் ஜாப் மூலம் வரும் பணம் அடுத்த 24 மணி நேரத்திற்குள் எனது SBI அக்கவுண்டிற்கு வந்துவிடும். இது கடந்த 2-12-2012 ஆம் தேதி கூட நடந்தது. இன்றும் நடக்க இருக்கிறது. எப்படி சொல்கிறேன் என்றால், இன்று சரியாக இரவு 7.11 (14/12/12) மணிக்கு NeoBux மூலம் 2 டாலர் சம்பாதித்து பேபாலுக்கு வித்ட்ரா செய்தேன். அப்பணம், இதோ கீழ் கொடுக்கப்பட்ட படத்தில் கூட தெரிகிறது பாருங்கள். $2 =100 ரூபாய், நாளை மாலைக்குள் எனது எஸ்.பி.ஐ வங்கிக்கு வந்துவிடும். இது நமது இந்திய தலைமை வங்கியான Reserve Bank of India , நமது நாட்டுடன் பண பரிவர்த்தனை செய்யும் வெளிநாட்டு ஆன்லைன் வங்கியான பேபாலுக்கு இட்ட கட்டளை. அதைப் போல், PAN card அனைத்து உறுப்பினர்களிடமும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. சரி, நாம் நமது பேங்க் அக்கவுண்டை இணைப்பதினைப் பார்ப்போம்.

Adding Local Bank Account to PayPal:
உங்களது பேபால் அக்கவுண்டுக்குள் லாக்கின் ஆனதும் மேல் உள்ள ஸ்கிரின் தெரியும். அதில் Profile என்றொரு ஆப்சன் இருபதனைக் டிக் செய்துள்ளேன் பாருங்கள். அந்த Profile என்ற ஆப்சனில் மவுஸ் பாயிண்டைக் கொண்டு சென்றதும், மேலும் நான்கு ஆப்சன் வரும், அதில் Add/Edit Bank Account என்பதனைக் கிளிக் செய்யுங்கள். இப்பொழுது திறக்கும் பக்கத்தில், Add என்றொரு பட்டன் அடுத்தும் கீழாக வருவதனைப் பாருங்கள், பார்த்து கிளிக் செய்யுங்கள்.

இப்பொழுது திறக்கும் பக்கத்தில் ஆரம்பத்திலே உங்களுக்கான டிப்ஸ் கொடுத்திருக்கிறார்கள் பாருங்கள்.

1. உங்களது வங்கிக் கணக்கு பெயரும், PAN காரிடில் இருக்கும் பெயரும் சரியாக உள்ளதா எனப் பார்த்துக் கொள்ளுங்கள். இல்லையெனில், வங்கிப் பெயரில் இருக்கும் PAN CARD proof நீங்கள் மீண்டும் சப்மிட் செய்து உறுதிப்படுத்த வேண்டும். நீங்கள் ஆரம்பத்திலேயே இதனை சரியாகச் செய்திருப்பதால், எந்த கவலையும் வேண்டாம் விட்டுவிடுங்கள்.

2. வங்கியில் நாம் கொடுத்துள்ள பெயரினை சரியாக டைப் செய்யுங்கள்( Selva Athithan) . குறிப்பு கடைசிப் பெயர்/இனிசியலை மாற்ற முடியாது. அதனால் தான் கணக்கினைத் தொடங்கும் போதே சரியாக செய்யுங்கள் எனச் சொல்வது.

3. அடுத்து பேங்க் நேம் (State Bank of India/Indian Bank/ICICI)

4. NEFT IFSC : உங்களது வங்கியில் நம் வங்கியின் IFSC or IFScode என்ன எனக் கேட்டால் சொல்வார்கள், அதனைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

5. Account Number - ( 6000008723*****உதாரணம்)

6. டிக் செய்யுங்கள். பணம் வந்தால் தானாகவே உங்களது வங்கிக்கு வந்துவிடும். வித்ட்ராவலோ, செக்காகவோ கேட்க வேண்டிய அவசியம் இல்லை. டாலராக இருந்தாலும் இந்திய ரூபாயாக கணக்கீடு செய்து கொடுத்துவிடுவார்கள்.
அவ்ளதான் , continue என்பதனைக் கிளிக் செய்யுங்கள்.
Confirm your Bank account with Received Money:
இப்பொழுது மீண்டும், நீங்கள் கொடுத்த தகவல்கள் எல்லாம் சரிதானா எனக் கேட்பார்கள். ஆமாம் என்று உறுதி செய்து கொள்ளுங்கள். மேலும், உங்களது வங்கிக் கணக்கிற்கு ஒர் சிறிய தொகையிலான பணம்(1 ரூபாயோ 4 ரூபாயோ) அனுப்புவார்கள். இப்பணம், 2 நாட்களுக்குள் உங்களது வங்கிக்கு வந்துவிடும். அவ்வாறு வந்த பணத்தில் ஒர் கீ கோடு/description code வந்திருக்கும், அதனைச் சரியாக கொடுத்தோம் என்றால், உங்களது வங்கி கணக்கு இணைக்கப்பட்டது உறுதிப்படுத்தப்படும். இது பற்றிய விவரத்தினை, தெளிவாக அவர்கள் ஆங்கிலத்தில் கொடுப்பார்கள். ஆகையால் படித்துக் கொள்ளுங்கள், அல்லது காப்பி பண்ணி வைத்துக் கொள்ளுங்கள். பணம் உங்களது வங்கி வருவதற்குள், மேலும் விவரமாக பேபால் அக்கவுண்டினை எப்படி எல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற விவரத்தினை PayPal பலன்கள் என்பதற்குள் சென்று படித்துக் கொள்ளுங்கள்.

உங்களது வங்கிக்கு பணம் வந்துவிட்டது என்பதனை ஸ்டேட்மண்ட் பார்த்து உறுதி செய்ததும், யார் அனுப்பினார்கள் என்ற இடத்தில் உள்ள கோடிங்க்களை தெளிவாக எடுத்துக் கொண்டு, பேபால் சைட்டில் லாக்கின் ஆகுங்கள். இப்போதும், அதே Profile => add bank account என்ற ஆப்சனுக்குள் சென்று, ஏற்கனவே கொடுத்துள்ள வங்கி பெயர் இருப்பதனைப் பாருங்கள். அதில் கண்டிப்பாக Verify என்றொரு பட்டன்/ஆப்சன் இருக்கும், அதனைச் சொடுக்கி, ஸ்டேட்மெண்டில் வந்த கோடிங்கை கொடுத்து வெரிபை செய்து கொள்ளுங்கள். அவ்ளதான்.


பேபால் அக்கவுண்ட் ஓகே!!!  :great:

குறிப்பு: பேபால் கம்பெனி மிகவும் நம்பகமானது என்பதால் தைரியமாக நமது வங்கி, கிரிடிட் கார்டு, டெபிட் கார்டு ஆகியவற்றின் எண்களை கொடுத்து அக்டிவேட் செய்து கொள்ளலாம். இதனால், பிற தளங்களில் ஏதேனும் வாங்கும் பொழுதோ, அல்லது பணத்தினைப் பெறும் பொழுதோ, நேரடியாக நாம் நமது கிரிடிட் கார்டு, பேங்க் அக்கவுண்ட், டெபிட் கார்டு நம்பர்களைக் கொடுக்காமல், பேபால் வழியாக செய்து கொள்ளலாம். நாம் செய்ய இருக்கும் பல ஆன்லைன் ஜாப் தளங்களும் பேபால் வழியாகவே நமக்கு பணம் வழங்க இருக்கின்றன என்பதும் மிக முக்கியம்.

உங்களது ஆன்லைன் பேங்க் அக்கவுண்ட் ரெடி ஆகிவிட்டது அல்லவா! அடுத்து நாம் ஆன்லைன் வேலை செய்ய ஆரம்பிப்போம்

மீண்டும் வாருங்கள் > பணம் சம்பாதிக்க !

0 comments:

Post a Comment